தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது

தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-12 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி முத்தையாபுரம் திருமாஞ்சி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 52). இவரது மகன் அலெக்சாண்டர் (32). சம்பவத்தன்று அலெக்சாண்டர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் சமையல் எதுவும் செய்து வைக்காததால், மோகன்ராஜை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மோகன்ராஜ், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அலெக்சாண்டரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்