சொத்து தகராறில் தந்தையை அடித்து உதைத்த மகன் கைது

சொத்து தகராறில் தந்தையை அடித்து உதைத்த மகன் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-06-20 21:23 GMT

புஞ்சைபுளியம்பட்டி:

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கண்டிசாலை பகுதியை சேர்ந்தவர் பொங்கியான் (வயது 70) இவருடைய மகன் நாகராஜ். இன்னும் திருமணம் ஆகாதவர். பொங்கியானுக்கு ஒரு மகளும் உண்டு. அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால் பேரன் மகேசுடன் வசித்து வருகிறார்.

தந்தை-மகனுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நாகராஜ் தந்தை பொங்கியானை சந்தித்து சொத்தை பிரித்து தர சொல்லி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தந்தையை நாகராஜ் அடித்து உதைத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின்பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜை கைது செய்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்