பெற்றோரை தாக்கிய மகன் கைது

நெல்லை மேலப்பாளையம் அருகே பெற்றோரை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-03 19:58 GMT

மேலப்பாளையம்:

மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 58). இவருடைய மகன் காளிதாஸ் (34). இவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை நிலவி வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று தந்தை சங்கரலிங்கம் மற்றும் தாயையும் காளிதாஸ் தகாத வார்த்தையால் பேசி கட்டையால் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்