தாய், தந்தையை தாக்கிய மகன் கைது
நாங்குநேரி அருகே தாய், தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் சொர்ணம் (வயது 51). இவருடைய மகன் ஆறுமுகம் (21) என்பவர் நேற்று முன்தினம் மது குடிக்க சொர்ணத்திடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் சொர்ணம் இரவு நேரத்தில் ஏன் சத்தம் போடுகிறாய் என்று கேட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், தாய் சொர்ணத்தை அவதூறாக பேசி தாக்கினார். மேலும் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு பணம் கேட்டு அவருடைய தந்தையையும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சொர்ணம், நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகபெருமாள் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை நேற்று கைது செய்தார்.