தந்தையை தாக்கிய மகன் கைது

சங்கரன்கோவில் அருகே தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-01 20:50 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மனைவி குருவம்மாள். இவர்களது மகன் முத்துசாமி (வயது 38.) திருமணமாகாதவர். இந்நிலையில் முத்துசாமியுடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் தனக்கு திருமணம் முடித்து வைக்க சொல்லி பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார்.

சம்பவத்தன்று தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த மண்வெட்டியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சுப்பையா, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து குருவம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்