சோளிங்கர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

சோளிங்கரில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-11-14 17:59 GMT

சோளிங்கர்

சோளிங்கரில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பழுதடைந்துள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையங்களை இடித்து அகற்றுதல், பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுதல், பல்வேறு ஊராட்சிகளில் ஜல்லி சாலை, கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை அமைத்தல், கலையரங்கம் அமைத்தல், புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிராம சபை கூட்டம் நடைபெறும் போது, அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பது இல்லை எனவும் ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு தெரியாமல் சில பணிக்கு டெண்டர்கள் விடுவதாகவும் குற்றம் சாட்டினார்கள்.

தொடர்ந்து பேசிய ஒன்றியக் குழு தலைவர் தற்போது மழை காலம் என்பதால் ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகங்களும் பேரிடர் பணிக்கு தயாராக இருக்க வேண்டும், கிராம சபை கூட்டங்கள் குறித்து ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனசேகரன், குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்