ராணுவ வீரர் படுகாயம்

கூடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-12-16 19:00 GMT

கூடலூர் கழுவன் மொக்கத்தேவர் சந்து தெருவை சேர்ந்தவர் அன்னக்கொடி. இவரது மகன் வீரவாஞ்சிநாதன் (வயது 22). ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் கூடலூரில் இருந்து கம்பத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வடக்கு துர்க்கை அம்மன் கோவில் அருகே சென்றபோது கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முகமது இர்பான் (21) என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராமல் மோதியது. இதில் வீரவாஞ்சிநாதன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்