மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் ராணுவவீரர் தவறி விழுந்து சாவு

மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த ராணுவவீரர் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்தார்.

Update: 2022-06-18 11:27 GMT

சோளிங்கர்

மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த ராணுவவீரர் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்தார்.

சோளிங்கரை அடுத்த வைலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் மகன் முரளி (வயது 32). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிகிறார் கடந்த இந்த மாதம் 14-ந்் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் சோளிங்கரில் உள்ள மாமியார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கூடலூர் சாலையில் வரும்போது வேகத்தடையை அவர் கவனிக்கவில்லை. இதனால் வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறியது.இதில் மோட்டார்சைக்கிளிலிருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி இறந்து விட்டார்.

இவருக்கு மனைவி தனலட்சுமி. 3 வயதில் மகன் உள்ளான். இதுகுறித்து கொண்டபாளையம் சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்