மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலியானார்

Update: 2023-09-09 18:45 GMT

விருதுநகர்

சிவகாசி அருகே திருத்தங்கல் தேவராஜ் காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர் ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இவர் நேற்று மாலை திருத்தங்கல்லில் இருந்து காருசேரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது விருதுநகர்-சிவகாசி ரோட்டில் ஏ. மீனாட்சிபுரம் அருகே வரும்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதில் கார்த்திக் படுகாயமடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்