புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைக்காரர்கள் கைது

உடன்குடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-15 15:13 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜன், ஐயப்பன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது உடன்குடி இடைச்சிவிளை கொட்டங்காடு சேர்ந்த ஜெயபாண்டி மகன் வசீகரன் (வயது 61), உடன்குடி கந்தசாமி மகன் கோபாலகிருஷ்ணன் (67) ஆகியோர் பெட்டிக்கடைகளில் அரசின் தடை உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அந்த கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 2 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்