ஜடாயு படித்துறையில் சோலார் மின்விளக்கு; நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

நெல்லை அருகன்குளம் அருகே ஜடாயு படித்துறையில் சோலார் மின்விளக்கை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-15 19:26 GMT

நெல்லை அருகன்குளம் அருகே கீழூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஜடாயு படித்துறை அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்திலும் பொதுமக்கள் எளிதாக வந்து நீராடி செல்ல வசதியாக மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அங்கு பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகி நயினார் பாலாஜி தனது சொந்த நிதி ரூ.70 ஆயிரம் செலவில் சோலார் உயர் மின்விளக்கு அமைத்து கொடுத்தார். அதனை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இயக்கி தொடங்கி வைத்தார்.

விழாவில் பங்கேற்ற பொதுமக்கள், அங்குள்ள தெற்கு ராமேஸ்வரம் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமி கோவிலை மேம்படுத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ.விடம் கேட்டு கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்