திருச்சியில் மாலை 5.14 மணி முதல் 5.44 வரை தெரிந்த சூரிய கிரகணம்
திருச்சியில் மாலை 5.14 மணி முதல் 5.44 வரை தெரிந்த சூரிய கிரகணம் ஏற்பட்டது.
இந்தியாவில் நேற்று சூரிய கிரகணம் மாலை 4.29 மணிக்கு தென்பட தொடங்கியது. திருச்சியில் மாலை 5.14 மணிக்கு தான் தெரிய தொடங்கியது. மாலை 5.45 மணி வரை நிகழ்ந்த இந்த சூரிய கிரகணத்தை பார்க்க திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள அண்ணா அறிவியல் கோளரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குழந்தைகள், பெரியவர்கள், சிறப்பு கண்ணாடி மூலம் சூரிய கிரகணத்தை கண்டு களித்தனர். சூரியன் அஸ்தமிக்கும் போது கிரகணத்தை வெறும் கண்ணால் காண முடிந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோளரங்க திட்ட இயக்குனர் அகிலன் உள்ளிட்ட ஊழியர்கள் செய்து இருந்தனர்.