அகழாய்வில் கிடைத்த மண் குவளை
சிவகாசி அருேக அகழாய்வில் மண் குவளை கிடைத்தது.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் நேற்று பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண் குவளைகள், பெண்கள் நொண்டி விளையாட பயன்படுத்திய சில்லு வட்டுகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் பொம்மைகள், தண்ணீர் குடம் மூடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் மூடிகள் ஆகியவை கிடைத்துள்ளன. தற்போது 9-வது அகழாய்வு குழி 5 அடி ஆழம் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 7 அடி ஆழம் தோண்டப்படவுள்ளது. அதில் மேலும் ஏராளமான பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிடைக்கும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.