மழையால் கல்லணை கால்வாய் கரையில் மண் அரிப்பு

மழையால் கல்லணை கால்வாய் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு தார்ச்சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-10-15 20:37 GMT

திருக்காட்டுப்பள்ளி:

சீரமைப்பு பணி

தஞ்சை அருகே கல்லணையில் இருந்து பிரிந்து செல்லும் கல்லணை கால்வாயில் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் சீரமைப்பு பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. கால்வாயில் தரைத்தளம் சிமெண்டு கான்கிரீட் தளமாக மாற்றுதல், கரையில் சிமெண்ட் கான்கிரீட் சாய் தளம் அமைத்தல், கீழ் போக்கு பாலங்கள் சீரமைத்தல், குமிழிகள் புதுப்பித்து கட்டுதல் உள்ளிட்ட பணிகள் ெதாடங்கி நடைபெற்றது.

மேலும் கல்லணை கால்வாய் கரையில் தார்ச்சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.இதனால் கல்லணை கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் கிளை வாய்க்கால்களில் திறக்கப்படுவதை கண்காணிக்க ஏதுவாக இருக்கும் என்று கூறப்பட்டது.

கரையில் மண் அரிப்பு

கடந்த சில நாட்களாக கல்லணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக கல்லணை அருகே கல்லணை கால்வாய் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது. சில இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையின் ஓரம் வரை மண் சரிந்து காணப்படுகிறது.

தார்ச்சாலை துண்டிக்கப்படும்

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடையும் போது புதிதாக கல்லணைக்கால்வாயில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை துண்டிக்கப்படும் அபாய நிலை உள்ளது. கல்லணைக்கால்வாயின் கரைகளில் ஏற்பட்டு உள்ள மண் அரிப்பு காரணமாக தார்சாலை சேதமடையாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்