கடற்கரையோர குடியிருப்புகளில் மண் அரிப்பு

திருமுல்லைவாசல் கடற்கரையோரம் உள்ள குடியிருப்புகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-08 18:45 GMT

சீர்காழி:

திருமுல்லைவாசல் கடற்கரையோரம் உள்ள குடியிருப்புகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண் அரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் கொடியம் பாளையம் முதல் தரங்கம்பாடி வரை 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரை உள்ளது.

இந்த கடற்கரை ஓரம் மேட்டு தெரு, ஆற்றங்கரை தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கடலில் சீற்றம் அதிகரிப்பதன் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையோரம் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புகள் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மேட்டு தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட தெருக்கள் தொடர்ந்து மண்ணரிப்பால் பாதிக்கப்பட்டு, குடியிருப்புகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இதை தடுக்கும் வகையில் அந்த பகுதியில் கடலில் கருங்கற்களை கொட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்