கோடை வெயிலை சமாளிக்க குளிர்பானங்கள்
போக்குவரத்து போலீசாருக்கு கோடை வெயிலை சமாளிக்க குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.;
மானாமதுரை
மானாமதுரை பகுதிகளில் பல்வேறு இடங்களில் குறிப்பாக பழைய பஸ் நிலையம், தேவர் சிலை, காந்தி சிலை, உச்சிமாகாளி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் போக்குவரத்து போலீசார் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடும் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் குளிர்பானங்கள், மோர் ஆகியவற்றை மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் வழயங்கினார். போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.