அழகப்பா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் சார்பில் கிராமப்புற சமூக பணி திட்டம்

அழகப்பா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் சார்பில் கிராமப்புற சமூக பணி திட்டம் நடைபெற்றது

Update: 2023-03-15 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை சார்பில் கிராம சேவை திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் 3 நாட்கள் மாணவர்கள் கலந்துகொண்ட சமூக பணி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2-ம் ஆண்டு முதுகலை மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு சிராவயல் கிராமத்தில் தெருக்களை சுத்தப்படுத்துதல், நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், கோவில்களின் சுற்றுப்புறத்தில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் ஆகிய பணிகளை செய்தனர். நிகழ்ச்சிக்கு சிராவயல் ஊராட்சி தலைவர் சரோஜாதேவிகுமார் தலைமை தாங்கினார். டாக்டர் விஜிவின்சென்ட் உடல் நலன் பேணி பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். நிறைவு நாள் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவேனில் கலந்துகொண்டு பெண்களின் தன்னம்பிக்கை குறித்தும், போலீஸ் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செயலி குறித்தும் பேசினார். ஆங்கிலத்துறை தலைவர் பொன்மதன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதா வரவேற்றார். முகாம் ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர், உதவி பேராசிரியர்கள் நடராஜன், வள்ளியம்மை, கனிமொழி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆங்கிலத்துறை 2-ம் ஆண்டு மாணவி ரேவதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்