சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் பொதுக்குழு கூட்டம்

சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் பொதுக்குழு கூட்டம் நடந்தது.;

Update: 2023-08-27 18:58 GMT

தமிழ்நாடு சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒன்றியம் இணைப்பு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தாந்தோணிமலையில் நடைபெற்றது. இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வாசுகி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஜெயந்தி வரவேற்று பேசினார். அரசு அலுவலர் ஒன்றியம் மாநில தலைவர் அமிர்தகுமார் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட தலைவர் பானுமதி, செயலாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்