சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.;

Update: 2023-07-19 18:08 GMT

சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை வேலூர் சாலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்றார்.

கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சமூகவலைதள செயற்பாட்டாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சி.என்.அண்ணாதுரை எம்.பி. வெள்ளி வீர வாள் நினைவு பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாநில பொறியாளர் அணி துணைத் தலைவர் கு.கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருவண்ணாமலை வேங்கிக்காலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி செயலாளரும், எம்.பி.யுமான சி.என்.அண்ணாதுரை தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 20 அடி உயர ரோஜாப்பூ மாலையை பெரிய கிரேன் மூலம் கொண்டு வந்து இளைஞர் பட்டாளம் மத்தியில் உதயநிதி ஸ்டாலினுக்கு தூக்கியபடி மாலை அணிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்