சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

நாகர்கோவிலில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது

Update: 2022-09-17 15:31 GMT

நாகர்கோவில், 

தந்தை பெரியார் பிறந்தநாள் அரசு சார்பில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பெரியாரின் 144-வது பிறந்தநாளான நேற்று குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி, சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசிக்க அனைத்து துறை அதிகாரிகளும், பணியாளர்களும் திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர்கள் தனபதி (ஊரக வளர்ச்சி முகமை), மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ (மகளிர் திட்டம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருப்பதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி ஹரிதாஸ், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், உசூர் மேலாளர்கள் கண்ணன் (பொது), சுப்பிரமணியன் (குற்றவியல்), முருகன் (ஆயம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்