சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தர்மபுரியில் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Update: 2023-09-15 19:02 GMT

கலெக்டர் அலுவலகம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சமூக நீதி நாள் உறுதிமொழி வாசிக்க அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் நசீர் இக்பால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அருண்மொழித்தேவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காவல்துறை அலுவலகம்

இதேபோன்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தார். தொடர்ந்து காவல்துறை அலுவலக பணியாளர்கள் மற்றும் போலீசார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியம், நாகலிங்கம், ஸ்வேதா, காவல்துறை அலுவலக நிர்வாக அலுவலர் ரேணுகாதேவி, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் பாருக் மற்றும் துறை அலுவலர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்