சமூக நீதி-மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

சமூக நீதி-மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-01-28 19:09 GMT

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி உத்தரவின்படி, மனிதநேய வார விழா கூட்டம் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன், அவரது குழுவினருடன் இணைந்து பொதுமக்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், மனிதநேயம் மற்றும் சமூக நீதி பற்றியும், மனிதநேய வார விழா நடைபெறுவதற்கான நோக்கம் பற்றியும், சமூதாயத்தில் மக்களிடம் பழகும்போது சகோதரத்துவத்துடன் பழக வேண்டும் என்றும், வருங்கால சந்ததியினருக்கு அனைவரும் சமம் என்பதை ஆழமாக பதிய வைக்க வேண்டும், அதற்கு பெற்றோர்கள் தங்களது இல்லத்தில் இருந்து அந்த முயற்சியை தொடங்க வேண்டும், என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்