சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
விக்கிரமசிங்கபுரத்தில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் சங்கரபாண்டியபுரம் மஸ்ஜிதே பாத்திமா ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் சமூக சமய மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பள்ளிவாசல் ஜமாத் தலைவர் மவுது கனி தலைமையில் நடைபெற்றது. பள்ளிவாசல் செயலாளர் முகம்மது முஸ்தபா வரவேற்றார். நிகழ்ச்சியை பள்ளிவாசல் இமாம் மதார் மைதீன் இம்தாதி வழிமொழிந்து தொடங்கி வைத்தார். மேலரதவீதி ஜாமி ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள், சங்கரபாண்டியபுரம்-பாத்திமா நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பல்சமய கூட்டமைப்பு நிர்வாகிகள், அனைத்து சமுதாய தலைவர்கள், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், தி.மு.க. கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய பேரவை தலைவர் முருகன், பல்சமய கூட்டமைப்பு நிர்வாகிகள் பாரதி கண்ணன், சூசை மாணிக்கம், தாமஸ், பண்ணை ரமேஷ், நகர தி.மு.க. செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளரும், யூனியன் தலைவருமான பரணி சேகர், அம்பை நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன், சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பிரதிநிதி செல்லதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், ஜனதாதள கட்சி நிர்வாகி ராஜேஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் கானகத்தி மீரான், இல்லத்து பிள்ளைமார் மத்திய சங்க செயலாளர் முருகேசன், முக்குலத்தோர் சமுதாய தலைவர் அர்ஜுனன், தமிழக வாழ்வுரிமை கட்சி தமிழ் செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் முகம்மது ஷபி நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியர் மைதீன் பிச்சை தொகுத்து வழங்கினார்.