சமூக விழிப்புணர்வு கூட்டம்
திருப்பத்தூர் அருகே சமூக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.;
திருப்பத்தூர் அருகே கதிரிமங்கலம் கிராமத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சமூக விழிப்புணர்வு மற்றும் நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.
துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் நிர்மலா, மனித உரிமைகள் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தயாளன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.