ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் பின்புறம் உள்ள தெரு பகுதி கடைக்குள் நேற்று பிற்பகலில் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் கடையில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று கடைக்குள் புகுந்த பாம்பினை லாவகமாக பிடித்து பிடித்தனர். இந்த பாம்பை காட்டு பகுதிக்குள் கொண்டு சென்று விடுவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கடைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.