காய்கறி கடை, குடியிருப்பு பகுதியில் நுழைந்த சாரை பாம்புகள் பிடிபட்டன

ஜோலார்பேட்டை அருகே காய்கறி கடை, குடியிருப்பு பகுதியில் நுழைந்த சாரை பாம்புகள் பிடிபட்டன.

Update: 2023-10-07 18:44 GMT

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே திரியாலம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் வீட்டில் நேற்று திடீரென 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு நுழைந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறையினர் சாரைப்பாம்பை ஏலகிரிமலை காப்புக்காட்டில் விட்டனர்.

இதேபோல் நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் அருகே சாலையோரம் முனிசாமி என்பவரின் மனைவி ஜெயா காய்கறி கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு நேற்று மாலை திடீரென 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களை அதனை அருகில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்