வீட்டுக்குள் புகுந்த பாம்புகள் பிடிபட்டன
ராஜபாளையம் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்புகள் பிடிபட்டன.;
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரது வீட்டின் மாடிப்படிக்கு கீழே சாரைப்பாம்பும், நல்ல பாம்பும் இருந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விலங்கு நல ஆர்வலர் மாரீஸ்கண்ணனுடன், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு பதுக்கி இருந்த பாம்பினை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டனர்.