முத்தூர் அருேக பாம்பு கடித்ததில் 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்,
முத்தூர் அருேக பாம்பு கடித்ததில் 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்,;
முத்தூர், அக்.16-
முத்தூர் அருேக பாம்பு கடித்ததில் 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்,
முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜெயபால். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லாவண்யா. இந்த தம்பதிக்கு நிவாஷ் (வயது 4), நிகிலன் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் ஜெயபாலின் மூத்த மகன் நிவாஷ் வீட்டை சுற்றி கட்டப்பட்டு உள்ள தென்னங்கீற்று தடுப்பை காலால் எட்டி உதைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த பாம்பு ஒன்று சிறுவன் நிவாசை கடித்தது.
இதனால் அலறி துடித்த சிறுவன் சத்தத்தை கேட்டு ஓடிவந்த நிவாசின் பெற்றோர் விபரத்தை அறிந்து உடனடியாக முத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவனை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நிவாஷ் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நிவாஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.