கடைக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

Update: 2023-06-10 19:15 GMT

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே தகட்டூர் கடைத்தெருவில் உள்ள செல்போன் விற்பனை கடையில் நேற்று முன்தினம் இரவு பாம்பு (கொம்பேறி மூக்கன்) புகுந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் வாய்மேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் அங்கு விரைந்து சென்று பாம்பை தேடினர். அப்போது அங்கு உள்ள செல்போன் உதிரி பாகங்களை எல்லாம் ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தனர். சுமார் 1 மணி நேர தேடலுக்குப் பின்பு கடைக்குள் பதுங்கி இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவமாக பிடித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்