தொண்டி,
திருவாடானை தாலுகா பாண்டு குடி அருகே உள்ள சேமனி வயல் கிராமத்தில் பாண்டித்துரை என்பவரது வீட்டிற்குள் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டுக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டு சென்றனர்.