போடி அருகே பள்ளிக்குள் புகுந்த பாம்பு
போடி அருகே பள்ளிக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
போடி, பிப்.11போடி அருகே தருமத்துபட்டியில் பாலமுருகன் சிறப்பு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று மாலை பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த அப்பள்ளி ஊழியர்கள், உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் சுருண்டு கிடந்த 7 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது.