கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு

கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு புகுந்தது.;

Update: 2022-12-16 18:45 GMT

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம், இ சேவை மையம், சமூக நலத்துறை, மருத்துவ காப்பீடு பதிவு செய்யும் இடம் போன்ற அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய நுழைவாயிலில் நேற்று மாலையில் நல்ல பாம்பு ஒன்று இருந்தது. இதை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைக்கும் படையினர் அங்கு வந்து நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்