வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

Update: 2022-10-31 18:45 GMT

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி பொன்னேரி கைக்காட்டி விவசாய அலுவலகம் பின்புறம் ராமச்சந்திரன் என்பவருடைய தோட்டம் உள்ளது இந்த தோட்டத்தில் இருந்து நேற்று காலை 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு அங்கிருந்த வீட்டுக்குள் புகுந்தது. இதுகுறித்து உடனடியாக நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் வீட்டில் பதுங்கிய சாரப்பாம்பை லாவகமாக பிடித்தனர் பின்னர் அதனை மோகனூர் சாலையில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்