ஈரோட்டில் பிரிட்ஜில் தஞ்சம் புகுந்த 6 அடிநீள பாம்பு
ஈரோட்டில் பிரிட்ஜில் தஞ்சம் புகுந்த 6 அடிநீள பாம்பு
ஈரோடு
ஈரோடு கே.கே.நகரில் உள்ள ஒரு மளிகைக்கடைக்குள் நேற்று முன்தினம் இரவு பாம்பு ஒன்று புகுந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பாம்பு பிடி வீரரான ஹரி அங்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது அந்த கடையில் உள்ள பிரிட்ஜின் பின்பகுதியில் உள்ள சிறிய இடைவெளியில் பாம்பு ஒன்று தஞ்சம் புகுந்து சுருண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹரி அந்த பாம்பை லாவகமாக பிடித்தார். அப்போது 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு என்பது தெரியவந்தது.