அஞ்செட்டி அருகே விவசாய நிலத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
அஞ்செட்டி அருகே விவசாய நிலத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி தாலுகாவிற்குட்பட்ட நாட்ராம்பாளையம் அருகே பஞ்சல்துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை அப்பகுதி மக்கள் நேற்று காலை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது 25 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை பத்திரமாக பிடித்த மக்கள் அஞ்செட்டி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.