சலவை எந்திரத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது

Update: 2022-07-09 16:02 GMT


வெள்ளகோவில் எல்.கே.ஏ. நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). இவரது வீட்டின் வெளியே மாடிப்படி அருகில் பாம்பு ஊர்ந்து சென்று சலை எந்திரத்துக்குள் புகுந்து கொண்டது. இதைக் கண்ட ஆறுமுகம் உடனே வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையில், சோமசுந்தரம் மற்றும் பாம்பு பிடிக்கும் வீரர்கள் வந்து சுமார் ஒரு மணிநேரம் முயற்சி செய்து சலவை எந்திரத்தில் இருந்த சுமார் 4 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.

மேலும் செய்திகள்