இரைதேட குவிந்த நத்தைகுத்தி நாரைகள்
மழையே பெய்யாமல் தண்ணீர் இன்றி சரணாலயங்கள் வறண்ட நிலையில் காணப்படுவதால் சாயல்குடி அருகே சிக்கல் ஊருணியில் இரைதேடுவதற்காக நத்தைகுத்தி நாரைகள் குவிந்துள்ளன.
மழையே பெய்யாமல் தண்ணீர் இன்றி சரணாலயங்கள் வறண்ட நிலையில் காணப்படுவதால் சாயல்குடி அருகே சிக்கல் ஊருணியில் இரைதேடுவதற்காக நத்தைகுத்தி நாரைகள் குவிந்துள்ளன.
பறவைகள் சரணாலயம்
ராமநாதபுரம் நயினார் கோவில் செல்லும் சாலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம், சாயல்குடி அருகே மேல செல்வனூர் பறவைகள் சரணாலயம், மற்றும் முதுகுளத்தூர் தாலுமழையே பெய்யாமல் தண்ணீர் இன்றி சரணாலயங்கள் வறண்ட நிலையில் காணப்படுவதால் சாயல்குடி அருகே சிக்கல் ஊருணியில் இரைதேடுவதற்காக நத்தைகுத்தி நாரைகள் குவிந்துள்ளன.காவில் சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் உள்ளிட்ட 5 பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. அதுபோல் இந்த பறவைகள் சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனில் மழை பெய்ய தொடங்கியதும் அக்டோபர் மாதத்தில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வரும்.
குறிப்பாக மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை, நத்தைகுத்திநாரை, கூலைக்கடா, கருப்பு அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன் மற்றும் இதை தவிர பல வகையான வாத்துகளும் பல பறவைகளும் வந்து செல்லும். இவ்வாறு வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தான் திரும்பி செல்லும்.
சிக்கல் ஊருணி
இந்த ஆண்டு பருவமழை சீசனில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யாததால் பறவைகள் சரணாலயங்களிலும், நீர்நிலைகளிலும் தண்ணீர் இல்லாததால் பறவைகள் முழுமையாக வரவில்லை. இந்த நிலையில் சாயல்குடி அருகே மேல செல்வனூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட பறவைகள் சரணாலயங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காட்சியளித்து வருவதால் ஏராளமான பறவைகள் நீர்நிலைகளை தேடி அலைந்து வருகின்றன. இதனிடையே சாயல்குடி அருகே உள்ள சிக்கல் ஊருணியில் ஏராளமான நத்தைகுத்திநாரைகள் இரைதேடுவதற்காக குவிந்துள்ளன.
ஊருணி தண்ணீரில் கிடக்கும் மீன்களையும் மற்றும் கண்மாய் ஓரத்தில் உள்ள சகதியில் உள்ள புழுபூச்சிகளை சாப்பிடவும் நத்தைகுத்தி நாரைகள் நீண்ட வரிசையில் நின்றபடி இரைகளை கொத்தி தின்று வருகின்றன.
குவியும் பறவைகள்
இந்த நாரைகளோடு ஏராளமான கொக்குகளும் அங்கு இரை தேட குவிந்துள்ளன. சிக்கல் ஊருணியில் ஏராளமான நாரைகள் குவிந்துள்ளதால் அங்கு குளிப்பதற்காக வரும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பறவைகளுக்கு இடையூறு இல்லாத வகையில் குளித்து செல்வதுடன் பறவைகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர்.
பருவமழை சீசனில் சிக்கல் பகுதியிலும் மழையே பெய்யாததால் சிக்கல் ஊருணியிலும் தண்ணீர் குறைவாகவே உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அதிகளவு பெய்த மழையால் இதே ஊருணி நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.