திருப்பூரில் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை 3 மர்ம ஆசாமிகள் வழி மறித்து கத்தியை கழுத்தில் வைத்து நகை பறித்துவிட்டு சாவுகாசமாக சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை 3 மர்ம ஆசாமிகள் வழி மறித்து கத்தியை கழுத்தில் வைத்து நகை பறித்துவிட்டு சாவுகாசமாக சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-13 17:27 GMT

வீரபாண்டி

திருப்பூரில் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை 3 மர்ம ஆசாமிகள் வழி மறித்து கத்தியை கழுத்தில் வைத்து நகை பறித்துவிட்டு சாவுகாசமாக சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகை பறிப்பு

திருப்பூர் காங்கயம் சாலை ராக்கியபாளையம் பிரிவு செந்தில்நகர் 3-வது வீதியைச்சேர்ந்தவர் செல்வம் நாயகம். இவருடைய மனைவி உமையம்மாள் (வயது 56). இவர் நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோவிலுக்கு வந்தார். செந்தில் நகர் 2-வது வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, இவருக்கு பின்னால் ஒரு மோட்டார்சைக்கிளில் 3 மர்ம ஆசாமிகள் வந்தனர். பின்னர் அந்த ஆசாமிகள் திடீரென்று உமையம்மாளை மறித்தனர். அதில் ஒரு ஆசாமி ேமாட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தும் உமையம்மாள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 6 பவுன் நகையை பறித்துள்ளனர். பின்பு 3 ஆசாமிகளும் அதே வழியில் சாவகாசமாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

போலீசார் விசாரணை

பின்பு செல்வவிநாயகம் திருப்பூர் மத்திய போலீசாரிடம் புகார் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 3 ஆசாமிகள் சாவகாசமாக இறங்கி உமையம்மாளின் கழுத்தில் கத்தி வைத்து நகையை பறித்துவிட்டு, அதே வழியாக தப்பிச்சென்றது பதிவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்