புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 பேர் கைது

திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-01 18:56 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் மேமாலூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து கடத்தி வரப்பட்ட 14 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தொடர்பாக மேமாலூர் கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் மணிகண்டன் (வயது 37) மற்றும் வீரன் மகன் ஞானவேல் (வயது 30) ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்