காரில் ரேஷன் அரிசி கடத்தல்

கோவில்பட்டியில் காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-26 18:45 GMT

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் மற்றும் போலீசார் கந்த சுப்பிரமணியன், பூலையா நாகராஜன் ஆகியோர் கோவில்பட்டி வள்ளுவர்நகர் 3-வது தெருவிலுள்ள காளியம்மன் கோவில் முன்பு வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 10 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக செட்டிக்குறிச்சி வடக்கு கோனார்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் சங்கிலிபாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்