காரில் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
நாங்குநேரி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்
நாங்குநேரி:
நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று நாங்குநேரி- மூலைக்கரைப்பட்டி சாலையில் தென்னிமலை பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். காரில் 480 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த நாங்குநேரி பட்டப்பிள்ளைபுதூர் பகுதியை சேர்ந்த சுடலைகண்ணு (வயது 32), நாங்குநேரி தென்னிமலை பகுதியை சேர்ந்த சத்திய சாய்பாபா (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், 480 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.