280 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-04 18:45 GMT

குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா உத்தரவின் பேரில் ராமநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் குமாரசாமி, தேவேந்திரன், முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் சாயல்குடி மாரியம்மன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிசரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது அந்த வாகனத்தில் 7 சாக்கு பைகளில் தலா 40 கிலோ எடையுள்ள 280 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக கடலாடி சாத்தான்குடியை சேர்ந்த குருசாமி (வயது 42) என்பவரை கைது செய்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்