வனச்சரக அலுவலகத்தில் இருந்து மரத்துண்டுகள் கடத்தல்

வனச்சரக அலுவலகத்தில் இருந்து மரத்துண்டுகள் கடத்தப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Update: 2022-12-25 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே பிதிர்காடு வனச்சரகர் அலுவலகத்தையொட்டி வன ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கிருந்த ஒரு மரம் விழும் நிலையில் இருந்ததால், உயர் அதிகாரிகள் உத்தரவின் படி அகற்றப்பட்டது. அந்த மரத்துண்டுகள் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனச்சரகர் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராவை ஆப் செய்து விட்டு, வளாகத்திற்குள் லாரி வந்து உள்ளதாகவும், அங்குள்ள மரத்துண்டுகள் லாரி மூலம் கூடலூரில் உள்ள மரம் அறுக்கும் ஆலைக்கு கடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. அதன் பேரில் உதவி வன பாதுகாவலர் கருப்புசாமி வனச்சரக அலுவலக வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சில மரத்துண்டுகள் கடத்தப்பட்டது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி வன பாதுகாவலர் தெரிவித்தார். ஆய்வின் போது வனச்சரகர் (பொறுப்பு) அய்யனார் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்