மினி சரக்கு வாகனத்தில் சாராயம் கடத்தல்

பட்டுக்கோட்டையில் மினி சரக்கு வாகனத்தில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-02-08 19:31 GMT

பட்டுக்கோட்டையில் மினி சரக்கு வாகனத்தில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வாகன சோதனை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் முத்துப்பேட்டை சாலையில் உள்ள கவிஞர் கல்யாணசுந்தரம் மணி பண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த மினி சரக்கு வாகனத்தை சோதனை செய்ய நிறுத்தினர்.

அப்போது அதில் வந்தவர்கள் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 30-க்கும் மேற்பட்ட சாராய பாட்டில்கள் கடத்திவரப்பட்டது தெரிய வந்தது.

2 பேருக்கு வலைவீச்சு

பின்னர் நடைபெற்ற விசாரணையில், அந்த வாகனத்தில் பொன்னவராயன்கோட்டை கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் சாமிநாதன் என்கிற சங்கர் மற்றும் உதயசூரியபுரம் கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் மகன் பாண்டியன் என்ற பழக்கடை பாண்டி ஆகிய இருவரும் வந்ததும், போலீசார் சோதனையிடுவதை அறிந்து இருந்து தப்பி ஓடியதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் சாராயம் கடத்த பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் சாராய பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சாமிநாதன், பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்