தந்தைக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு காதலனுடன் மாயமான மாணவி

தந்தைக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு காதலனுடன் மாணவி மாயமானார்.

Update: 2023-02-06 19:09 GMT

சிவகாசி, 

சிவகாசி பகுதியை சேர்ந்த 20 வயது பெண் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் இன்று கல்லூரி முடிந்து தாமதமாக வீட்டிற்கு வருவேன் என்று கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் கல்லூரி முடிந்தும் நீண்ட நேரமாக மகள் வீடு திரும்பாததால் மகளின் செல்போனுக்கு அவரது தந்தை போன் செய்துள்ளார். அப்போது அந்த போனை கல்லூரி மாணவி எடுக்காமல் இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து மகள் போன் செய்து பேசுவாள் என்று அவரது தந்தை நினைத்துக்கொண்டு இருந்த நேரத்தில் அவரது செல்போனுக்கு மகள் எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார். அதை தந்தை படித்த போது அதில் எனக்கு பிடிச்சவன் கூட போகிறேன்.... தேடாதீங்க.... சாரி அப்பா என்று அனுப்பி இருந்தார். எஸ்.எம்.எஸ். பார்த்து பதறிய தந்தை இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து மகளை தேடினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்