புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி

வீரவநல்லூரில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-01-14 18:37 GMT

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் பேரூராட்சியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ், "புகையில்லா போகி" குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியானது வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் நடுநிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் பேரூராட்சி தலைவர் சித்ரா, துணை தலைவர் வசந்தசந்திரா, கவுன்சிலர்கள் கீதா, அனந்தராமன், தாமரைச்செல்வி, சுகாதார மேற்பார்வையாளர் பிரபாகரன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பொதுமக்கள் புகையில்லா போகி கொண்டாடும் விதமாக, வீரவநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட நயினார் காலனி, கட்டளைத் தெரு, வண்டிமலைச்சியம்மன் கோவில் 3-ல் தெற்கு தெரு மற்றும் கிளாக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக பழைய கழிவுகள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கி, கழிவு பொருட்களை சேகரிப்பு மையங்களில் சேர்க்குமாறு பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்