கோரைபுற்களுக்கு வைக்கப்பட்ட தீயால் சாலையில் புகை மூட்டம்

கோரைபுற்களுக்கு வைக்கப்பட்ட தீயால் சாலையில் புகை மூட்டம்

Update: 2022-06-27 16:36 GMT

திருவாரூர் ரெயில் நிலையம் அருகே வயலில் கோரைபுற்களுக்கு வைக்கப்பட்ட தீயால் சாலையில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

புைக மூட்டம்

திருவாரூர் ரெயில் நிலையம் அருகே புகையிலை தோட்டம் பகுதியில் உள்ள வயலில் வளர்ந்துள்ள கோரைபுற்களுக்கு மர்மநபர்கள் தீவைத்துள்ளனர். இந்த தீ மளமளவென பரவி கோரைபுற்கள் கொழுந்து விட்டு எரிந்தது.

இ்தனால் அருகில் இருந்த ரெயில் தண்டவாள பாதையில் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டு, அந்த வழியாக சென்ற ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் அவதியடைந்தனர்.

வாகன ஓட்டிகள் அவதி

இந்த புகை மூட்டம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதி, ரெயில் நிலையம் மற்றும் ரெயில்வே மேம்பாலம் சாலைகளிலும் பரவி வாகனங்கள் செல்வது கூட தெரியாத அளவிற்கு காணப்பட்டது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவாரூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்