மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம்

Update: 2023-03-14 16:36 GMT


மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் ஆகியோருக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் வகையில் இரண்டாம் கட்டமாக நேர்முக தேர்வு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நேர்முக தேர்வில் 112 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நாகராஜ், மகளிர் உதவி திட்ட அலுவலர் மார்ட்டின், பார்வையற்றோர் சங்க உறுப்பினர் சங்கரையப்பன், காதுகேளாதோர் சங்க உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நேர்முக தோ்வுக்கான ஏற்பாடுகளை மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் செய்திருந்தார

மேலும் செய்திகள்