'ஸ்மார்ட் காவலர்' செயலி
‘ஸ்மார்ட் காவலர்’ செயலி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
அருப்புக்கோட்டை,
களப்பணியாற்றும் போலீசார்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக 'ஸ்மார்ட் காவலர்' செயலி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் இந்த திட்டத்தினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தொடங்கி வைத்தார்.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கருண்கரட், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், கிரேஸ் ஜோபியா பாய், டவுன் போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.