சிறுதானியங்கள் விழிப்புணர்வு முகாம்

பலவநத்தம் கிராமத்தில் சிறுதானியங்கள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-12 11:28 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த பலவநத்தம் சோமநாதீஸ்வரர் கோவிலில், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட வேளாண்மைத்துறை துணை இயக்குனர் ஸ்ரீபன்ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வினித்மேக்தலின், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் மோகன் வரவேற்றார்.

முகாமில், சிறுதானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரித்தல், சாகுபடி செய்யப்பட்ட தானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் ஆகியவை குறித்து விளக்கிக் கூறினர். நெல் தரிசில் உளுந்து, சாகுபடி திட்டத்தின் கீழ், நெல் அறுவடைக்குப் பின் 5 நாளில் உளுந்து விதைத்து குறுகிய காலத்தில் அதிக மகசூல் செய்யும் முறைகள், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தென்னை மரத்தில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த செயல்விளக்கம் ஆகியவை நடைபெற்றது. விவசாயிகளுக்கு இடுபொருட்களும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் நித்யா தலைமையில், உதவி அலுவலர்கள் ராஜன், பற்குணன் ஆகியோர் செய்து இருந்தனர். ஆத்மா திட்ட தலைவர் இளங்கோ நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்